உலக பொருளாதார மன்ற மாநாடு – பிரதமர் மோடி உரை
உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் இன்று காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். உலகம் முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில்துறை தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
நான்காவது தொழில் புரட்சி- மனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் என்பது குறித்து பிரதமர் உரையாற்ற உள்ளார். பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளோடும் பிரதமர் உரையாட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிந்தைய உலகத்துக்கான உலக பொருளாதார மன்றத்தின் மாபெரும் புத்தாக்க நடவடிக்கையின் தொடக்கத்தை டாவோஸ் மாநாடு குறிக்கிறது.