#BREAKING: பாலியல் சீண்டல் வழக்கில் அளித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு முறையீடு ..!
சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு 12 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி புஷ்பா கனெடிவாலா ஆடைக்கு மேலே பெண்ணின் மார்பகங்களை தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என கூறினார்.
இந்த தீர்ப்பு பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டை வழக்காக தாக்கல் செய்ய வேணுகோபாலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், பாலியல் சீண்டல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க மும்பை ஐகோர்ட் கிளை நீதிமன்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.