சசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருந்தது. சசிகலா சுயநினைவுடன் இருக்கிறார். தாமாகவே உணவு உட்கொள்கிறார். உதவியுடன் சசிகலா நடக்கிறார் என கூறியது. கொரோனா தோற்று குறைந்து, தற்போது அறிகுறிகள் இல்லாத நிலையில், சசிகலாவுக்கு தொடர்ந்து கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை ஆர்.டி.பி.சி.ஆர் கருவி மூலம் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது என்றும் இந்த பரிசோதனையில் நெகடிவ் என்று வந்தால் சசிகலா முழுவதும் குணமடைவர் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு பெற்று இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை ஆனார். சிறைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று சசிகலாவிடம் விடுதலைக்கான கையொப்த்தை பத்திரத்தில் பெற்றனர். விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை மருத்துவமனையில் சசிகலாவிடம் சிறைத்துறையினர் ஒப்படைத்தனர். பிப் முதல் வாரத்தில் சசிகலா தமிழகம் திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.