86 ஆண்டுகள் ஆன பழமையான பாலம் அமெரிக்காவில் குண்டு வைத்து தகர்ப்பு …!
பழமையான பாலம் அமெரிக்காவில் குண்டு வைத்து தகர்க்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
கென்டகியில் உள்ள பார்க்லே ஏரியின் மீது கடந்த 1932-ஆம் ஆண்டு ஒரு மேம்பாலம் கட்டப்பட்டது.
பாலம் கட்டி 86 ஆண்டுகள் ஆன நிலையில் பாதுகாப்பு கருதி பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாலத்தை சுற்றிலும் ஆயிரத்து 500 அடி தூரத்துக்கு சாலைப் போக்குவரத்து மற்றும் ஏரிக்குள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாலம் சில வினாடிகளில் பாதுகாப்பான முறையில் இடிந்துவிழும் தொழில்நுட்பத்துடன் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.