மீண்டும் எல்லைகளுக்கு திரும்புங்கள் – பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்
உண்மையாக போராடும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்ப வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். அனுமதித்த நேரத்திற்கு முன்பே பேரணி தொடங்கி டெல்லியில் நுழைந்ததால், காவல்துறை கண்ணீர் வெடிகுண்டு வீசியுள்ளது. போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது.
இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. வன்முரை தீவிரமடைந்ததை அடுத்து டெல்லி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது தடியடி நடத்தியத்துக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், உண்மையாக போராடும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்ப வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்வுகள் அதிர்ச்சியளிப்பதாகவும், எந்த வகையிலும் வன்முறை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அமைதியான முறையில் போராடும் விவசாயிகளின் நல்லெண்ணத்தை இது கெடுக்கும். கிசான் தலைவர்கள் தங்களை ஒதுக்கிவைத்து, டிராக்டர் ராலியை இடைநீக்கம் செய்துள்ளனர். அனைத்து உண்மையான விவசாயிகளும் டெல்லியை விட்டு வெளியேறி எல்லைகளுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Shocking scenes in Delhi. The violence by some elements is unacceptable. It’ll negate goodwill generated by peacefully protesting farmers. Kisan leaders have disassociated themselves & suspended #TractorRally. I urge all genuine farmers to vacate Delhi & return to borders.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) January 26, 2021