வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும் – மு.க.ஸ்டாலின்
ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கு, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்றனர்.அப்போது ஒரு சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதாகவும்,அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனால் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,மத்திய அரசின் அணுகுமுறையே விவசாயிகளின் போராட்டக் காட்சிகளுக்குக் காரணம்.அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது.வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும்.ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அணுகுமுறையே #FarmersProtests போராட்டக் காட்சிகளுக்குக் காரணம்.
அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் #FarmLaws நிறைவேறியே இருக்காது!
வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும்!
ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) January 26, 2021