புதிய மொபைல் ஆப் மூலம், வீடுகளில் திருட்டு நடக்காமல் கண்காணிக்கும் திட்டம்..!
மதுரை மாநகர காவல் துறையால், புதிய மொபைல் ஆப் மூலம், வீடுகளில் திருட்டு நடக்காமல் கண்காணிக்கும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வீடுகளில் ஆள் இல்லாததை பயன்படுத்தி, கொள்ளையர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், மதுரை மாநகர காவல் துறை சார்பில், புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்பவர்கள், இந்த ஆப் மூலம், கண்காணிப்பு கேமரா தேவை குறித்து விண்ணப்பிக்கலாம் என்றும், அதன்படி பூட்டிய வீட்டைக் கண்காணிக்க, வீட்டின் அருகே வயர்லெஸ் கேமரா பொருத்தப்படும் என்றும் கூறினார்.
அதை கண்காணிக்கும் அதிகாரிகள், மர்ம நபர்கள் நடமாட்டம் தென்படும்போது, தேவையான காவலர்களை அனுப்பி விசாரணை நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள், நிம்மதியாகச் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.