இஸ்ரோவின் சாதனையை முறியடித்த எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்!
எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ராக்கெட், நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் 143 ரக செயற்கைக்கோளை அனுப்பப்பட்டுள்ளன.
விண்வெளி தொழில்நுட்பத்தில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிற நிலையில், இந்த நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ராக்கெட், நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் 143 ரக செயற்கைக்கோளை அனுப்பப்பட்டுள்ளன. இது புதிய பாதையை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், முதல் கட்டமான பூஸ்டர் தனியாக பிரிந்து பூமிக்கு திரும்பி உள்ளது. அது அட்லாண்டிக் கடலில் நிறுத்தப்பட்ட மிதவையில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
பூமியின் வட்டப்பாதையில், ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 143 செயற்கைக்கோள்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 143 செயற்கைகோள்களில் 133 செயற்கைக்கோள்கள் அரசு மற்றும் வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் ஆகும். மீதமுள்ள 10 செயற்கை கோள்கள் ஸ்பேஸ் எக்சின் ஸ்டார்லிங் செயற்கை கோள்கள் ஆகும்.
2014-ஆம் ஆண்டு, இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 104 செயற்கை கொலைகளை ஒரே ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. தற்போது எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நாசாவுடன் இணைந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.