பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியதாக 3000 பேர் கைது…!
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியதாக இதுவரை 3000 பேர் கைது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை துவக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அனைவரும் கருப்பு உடை அல்லது கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் எனவும், அனைவரது வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும், திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது.
பிரதமர் மோடி வருகையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியதாக இதுவரை 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.