நாள் முழுதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கான சில வழிமுறைகள்!
காலையில் நாம் செய்யக்கூடிய செயல்முறைகள் தான் அந்த நாள் முழுதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும், அவற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
காலை நேரத்தில் எழுந்ததும் நாம் தற்போதெல்லாம் மொபைல்களை எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு மணி நேரம் படுக்கையிலேயே உருண்டு கிடக்கிறோம். இதனால் அந்த நாள் முழுவதும் நிச்சயம் நாம் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முடியாது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றால் காலையில் நாம் செய்ய கூடிய உடற்பயிற்சிகளும் நம்முடைய வழக்கமான பழக்கவழக்கங்களும் தான் நம்மை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும். இவ்வாறு நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதற்கு சில வழிமுறைகளை அறிந்து கொள்வோம். அதாவது காலையிலேயே அந்நாள் முழுதும் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து முதலில் நாம் யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நமக்கு இன்று என்ன வேலை இருக்கிறது என்பதை முதலில் நாம் அட்டவணைப்படுத்தி வைத்துக் கொண்டு அதன்படி ஒவ்வொன்றாக செயல்முறை படுத்த முயற்சிக்க வேண்டும். அடுத்ததாக நாம் காலையில் எழுந்ததும் ஒரு சிறிய உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது நாம் சுறுசுறுப்புடன் இருக்க உதவுவதுடன் நம்மை சந்தோஷமாகவும் நேர்மையான சிந்தனை உள்ளவர்களாகவும் இருப்தற்கு வழிவகுக்கும். அடுத்ததாக நமது காலை கடமைகளை ஒழுங்காக செய்ய வேண்டும். கழிவறை செல்வது முதல் பல் துலக்குவது, குளிப்பது மற்றும் தியானம் செய்பவர்கள் தியானம் செய்யலாம். கடவுளிடம் வேண்டுபவர்கள் சிறிது நேரமாவது தினமும் கடவுளை நினைத்து பார்க்க வேண்டும். இந்த காலைக்கடன்களை ஒழுங்கு வர செய்தாலும் தினமும் நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.
அதை விட்டுவிட்டு சமூக வலைதள பக்கங்களில் நமது கவனத்தை செலுத்த கூடாது. அடுத்ததாக ஒவ்வொரு நாளும் புதிதாக பிறக்கும் பொழுது அந்த நாளை நாம் நேசிக்க வேண்டும். அந்த நாளில் நமக்கு பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் அவை கடந்து போகும்படி நாம் நிதானமாக யோசிக்க வேண்டும். இதுபோல ஒவ்வொரு காலையிலும் நமது கடமைகளை செய்து நமக்கு என்று ஒரு அட்டவணையை ஏற்படுத்தி, குறிப்பான சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, மொபைல் உபயோகிப்பதை தவிர்த்து, காலை நேரத்தை பயன்படுத்தும் பொழுது அந்த நாள் முழுவதும் நமக்கு மகிழ்ச்சியான நாளாகவும் சுறுசுறுப்பான நாளாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.