எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜெயலலிதாதான் முதலமைச்சர் – முக ஸ்டாலின்

Default Image

திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜெயலலிதாதான் நமக்கும் சேர்த்து முதலமைச்சர் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவெற்றியூரில் நடந்துவரும் மொழிப்போர் தியாகிகள் நினைவுதின பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றியபோது, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களுக்கு, துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். இன்னும் நான்கு மாதத்தில் ஆட்சி மாற்றம் வரப்போகுது, அதில் எந்த மாற்றமும் இல்லை. உலகத்திலேயே இந்த கொரோனா தொற்றுக்கு மத்தியில் மக்களை நேரில் சந்தித்து உதவி செய்த ஒரே கட்சி திமுகதான்.

ஆளும் கட்சி செய்யும் பணி அனைத்தையும் திமுக செய்தது. கொரோனாவிலும் கொள்ளையடித்த ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய அதிமுக ஆட்சி. கொரோனா பரிசோதனை செய்யும் கருவில் கொள்ளை. முகக்கவசத்தில் கொள்ளை. ப்ளீச்சிங் பவுடரில் கொள்ளையடித்த ஆட்சி. இன்னும் வெட்கத்தைவிட்டு சொல்கிறேன், துடைப்பத்தில் கொள்ளையடித்த ஆட்சி அதிமுகத்தான் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், அம்மா ஆட்சி கூறிக்கொண்டு இருப்பவர்கள், ஜெயலலிதா மரணத்திற்கு என்ன காரணம்? என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? என்ன மருந்து கொடுக்கப்பட்டது? என்று இன்னமும் தெரியவில்லை. அதைப்பற்றி இன்னும் தெரிவிக்கவில்லை. பதவி போனதுக்கு பிறகு துணை முதல்வர் பன்னீர்செல்வம் விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடினார். சாதாரணமாக இறந்தவர்களை நாம் விசாரிக்கிறோம், இறந்தது முதலமைச்சர் எப்படி கேட்காமல் இருக்க முடியும்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜெயலலிதாதான் நமக்கும் சேர்த்து முதலமைச்சர், அதை நான் இங்கு மறுக்கவில்லை. ஆனால், அவர் எப்படி இறந்தார் என்பது இதுவரைக்கும் தெரிந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தை எந்த முகத்தை வைத்துக்கொண்டு திறக்கப்போகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா மற்றும் எம்ஜிஆர் முதல்வராக இருக்கும்போது தான் மறைந்து போனார்கள். அவர்கள் உடல்நிலை குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவுபடுத்த அரசின் சார்பில் அறிக்கை வரும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்