அடிக்கடி உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்? அப்ப உங்களுக்காக இந்த பதிவு…!
நாம் நமது வாழ்க்கை சூழலில், பல வேளைகளில் உணவை தவிர்ப்பதுண்டு. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இந்த பதிவில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
நமது அன்றாட வாழ்வில் வீட்டுவேலைகள், அலுவலக வேலைகள் என சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதை மறந்துவிடுகிறோம். மேலும் பலர் பசி உணர்வு இல்லாத காரணத்தினாலும், சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உணவை தவிர்க்கின்றனர். இது நமது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. உணவை தவிர்ப்பதால் நான் பின்வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
குறைந்த இரத்த சர்க்கரை அளவு
உணவை தவிர்ப்பதால், உடலில் இரத்தத்தில் இரத்த சர்க்கரை அளவு கடுமையாக குறைகிறது. இதனால் நாம் என்ன செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
உடல் தொந்தரவுகள்
ரத்தத்தில் சர்க்கரை அளவும் பசியை அளவு குறைவதால், நீங்கள் நாள் முழுவதும் எரிச்சலுடன் காணப்படுபவர்கள். இதனால் ஒட்டுமொத்த நரம்புகளும் பாதிக்கப்படுவதோடு, இது மன நலத்திற்கு நல்லது அல்ல. உணவை தவிர்ப்பதால் மனநிலை மாறுதல், கவனம் சிதறுதல், எரிச்சல், ஒற்றைத் தலைவலி மற்றும் உணர்ச்சி தொந்தரவுகள் ஆகியவை ஏற்படும். இது காலப்போக்கில் மனச்சோர்வுக்கு வழிவகுத்து கடுமையான நடத்தை மாற்றங்களுக்கும் வழிவகுக்கும்.
அதிகப்படியான பசி உணர்வு
நாம் உண்ணாவிரதம் மேற்கொண்டு உணவை தவிர்த்தால் இறுதியில் நாம் உண்ணாவிரத்தை முடிக்கும் போது, நாம் முன்னர் சாப்பிட்டதை விட அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும். இதனால் நமது உடல் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்ளும்.
தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கணக்கெடுப்பு ஆய்வின்படி பரிந்துரைக்கப்பட்ட அளவு புரதத்தை தினமும் உட்கொள்ளாத பெரியவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் உணவை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளனர். 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒரு நாளைக்கு 3 வேளைக்கும் குறைவான உணவை சாப்பிடுவதால் கூறப்படுகிறது.
புரதச்சத்து குறைபாடு ஏற்படும்போது ஒருவரால் நீண்ட நேரம் உட்காருவது அல்லது படுக்கைக்கு செல்வதிலிருந்து அல்லது வெளியே செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் உடல் பலவீனமாக காணப்படும்.
ஊட்டச்சத்து
நீண்ட காலத்திற்கு உணவை தவிர்ப்பது மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் ஊட்டச்சத்து வெற்றிடத்திற்கு வழிவகுக்கும். இது வலிமை மற்றும் சகிப்பு தன்மையை குறைத்து, நீண்ட கால குறைபாடுகள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
சரியான முறையில் உணவு உட்கொள்வது எப்படி?
உங்கள் உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்து வழங்க கூடிய ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க நல்ல ஊட்டச்சத்து மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் கோழி, கடல் உணவு, முட்டை, பீன்ஸ், பால் போன்ற புரத உணவுகளை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சிற்றுண்டிகள்
நாம் இடைவேளையில் சில சிற்றுண்டிகளை உட்கொள்ள விரும்புவதுண்டு. அப்போது பயறு வகைகள், உலர்ந்த பழங்கள் அல்லது தயிர் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். புரதம் நிறைந்த முழு பழங்களான கொய்யா, கிவி பழம் போன்றா ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளுதல், உடலுக்கு ஆற்றலையும், வலிமையையும் தருகிறது.
பயணத்தின்போது உணவு உட்கொள்ள விருப்பமில்லாத பெரியவர்கள், ஊட்டச்சத்து நிறைந்த பானங்களை அருந்துவதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இது நமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.