காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.!

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம், தனது வில்லியனுர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். கட்சிக்கு துரோகம் இழைத்ததால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம், தனது வில்லியனுர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக புதுச்சேரி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளார். நமச்சிவாயத்திற்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்எல்ஏவும் தீப்பாஞ்சானும் ராஜினாமா செய்தார்.
மேலும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் நமச்சிவாயம் பாஜகவில் இணைவார் என்று தகவல் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025