அடிக்கடி முகத்தில் எண்ணெய் வழியுதா ….. சில இயற்கையான டிப்ஸ் இதோ!
முகத்தில் சிலருக்கு அடிக்கடி எண்ணெய் பிசுக்கு தோன்றுவது வழக்கம். அதற்க்கு கரணம் ஒவ்வொருவரின் மாறுபட்ட ஹார்மோன்களும், அதிகப்படியான கொழுப்புகளும் தான். இவற்றை எளிய முறையில் போக்குவதற்கான சில இயற்கையை குறிப்புகளை அறியலாம் வாருங்கள்.
இயற்கை டிப்ஸ் சில
தினமும் சோப்பு போட்டு முகத்தை கழுவுவதற்கு பதிலாக கடலை மாவு போட்டு முகத்தை தொடர்ச்சியாக கழுவி வரும் பொழுது எண்ணெய் பிசுக்கான சருமம் கொண்டவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைப்பதுடன், முகம் வெண்மையாகவும் மாறும். அடுத்ததாக முட்டையின் வெள்ளை கருவை 15 நிமிடம் முகத்தில் பூசி விட்டு கழுவி வந்தாலும் நல்ல பலம் கிடைக்கும்.
புதினா இலையுடன் கொஞ்சம் கொத்தமல்லியையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வர எண்ணெய் சருமம் குணமடைவதுடன், முகப்பருக்களும் வராது. அது போல மோர் மற்றும் தக்காளி ஆகிய இரண்டுமே தனித்தனியாகவோ அல்லது ஒன்றாக சேர்த்தோ பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும், குறைந்தது 15 நிமிடம் வரை நன்றாக ஊற வைக்கவும். கற்றாழை ஜெல் பூசி வரலாம். ஆரஞ்சு பழத்தின் தோலை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரில் முகம் கழுவினாலும் எண்ணெய் பிசுக்கு மறையும்.