கடந்த மூன்று சீசனிலும் எனக்கும் அழைப்பு வந்தது – செல்லாததற்கு காரணம் இதுதான்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 சீசன்களிலுமே தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால் ஏன் செல்லவில்லை எனவும் ஆரி உண்மைக் காரணங்களை தற்பொழுது கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி. கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது சீசன் 4 முடிவடைந்து உள்ளது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில், நடிகரும் சமூக ஆர்வலருமான ஆரி கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பெயரையும் பெற்று வெற்றியாளராகியுள்ளார். இந்நிலையில் முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.
அதில், அவருக்கு பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து அழைப்பு வந்ததாகவும் ஆனால் முதல் சீசனில் தான் கலந்து கொள்ளாததற்கு காரணம் ஜல்லிக்கட்டு பிரச்சனை நடந்து கொண்டிருந்ததும் அப்பொழுது அந்நிகழ்ச்சி குறித்த சரியான ஐடியா இல்லாததும் தான் கரணம் எனவும், இரண்டாம் சீசனில் அழைப்பு வந்த பொழுது தனக்கு திருமணமாகி இருந்ததாகவும், மூன்றாம் சீசனில் அழைப்பு வந்தபோது தனது மகள் மிகவும் குழந்தை என்பதாலும் செல்லவில்லை என கூறியுள்ளார். தற்பொழுது சூழ்நிலைகள் நன்றாக இருந்ததால் தான் நான்காவது சீசனில் கலந்து கொண்டதாகவும், இந்த சீசனில் தான் கலந்து கொள்வதற்கு முக்கியக் காரணமே இயக்குனர் தாமிரா தான் எனவும் கூறியுள்ளார்.