ஆமாம் காதலன் இருக்கிறான், ஆனால் திருமணம் இப்போது கிடையாது நடிகை ஸ்ருதிஹாசன்

Default Image

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடிய ஸ்ருதி ஹாசனிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தனக்கு காதலன் இருப்பதாகவும் ஆனால் இந்த ஆண்டு திருமணம் இல்லை எனவும் அவர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் ஆகிய கமலஹாசனின் மகள் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போதைய காலத்தில் நடிகர் நடிகைகள் ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் மூலமாக உரையாடுவது வழக்கம் ஆகிவிட்டது. அது போல ரசிகர்களின் கேள்விக்கு உண்மை பொய் பதிலளித்து கொண்டிருந்த ஸ்ருதிஹாசனிடம் ரசிகர்கள் அவரது காதலர் பற்றி பல கேள்விகள் கேட்டுள்ளனர்.

உங்களுக்கு காதலன் இருக்கிறாரா என ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு ஆம் என பதிலளித்துள்ளார். மேலும் மற்றொரு ரசிகர் இந்த ஆண்டு திருமணம் உண்டா என கேட்டதற்கு இல்லை என பதிலளித்துள்ளார். ஸ்ருதிஹாசனிடம் மேலும் நீங்கள் தற்பொழுது யாரையும் வெறுக்கிறீர்களா உங்கள் முன்னால் காதலரை வெறுக்கிறீர்களா? என கேட்டதற்கு நான் எப்பொழுதும் யாரையும் வெறுப்பதில்லை எனவும், எப்போதும் காதலில் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்