மனித மூளை மூடப்படும் போது வாய் பேசிக் கொண்டே இருக்கும்! வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ!
முட்டாள்கள்.. மனித மூளை மூடப்படும் போது வாய் பேசிக் கொண்டே இருக்கும். புலியின் கோப கட்டுப்பாட்டை பாராட்டுங்கள். ஆனால் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட செயலுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.
சுசந்தா நந்தா என்பவர் இந்திய வனத்துறை அதிகாரியாக ஒடிசா, கேடரில் பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் ஒரு புலி திடீரென்று சுவர் மீது குதித்து, அதன் மேல் நடந்து செல்கிறது. அதனை மக்கள் சத்தமாக பேசியபடியே மிகவும் அருகில் நின்று புகைப்படம் எடுக்கின்றனர்.
ஆனால் அந்த புலி அருகே நின்ற யாரையும் எதுவும் செய்யவில்லை இந்த நிலையில் இந்த வீடியோவை பதிவிட்ட அதிகாரி, வீடியோவை பதிவிட்டு, ‘முட்டாள்கள்.. மனித மூளை மூடப்படும் போது வாய் பேசிக் கொண்டே இருக்கும். புலியின் கோப கட்டுப்பாட்டை பாராட்டுங்கள். ஆனால் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட செயலுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.’ என அவர் தெரிவித்துள்ளார்.
Idiotitis…
When human brain shuts down & mouth keeps talking.Appreciate the anger management of the tiger. But that can’t be guaranteed in future. pic.twitter.com/dSG3z37fa8
— Susanta Nanda IFS (@susantananda3) January 21, 2021