ஓடிடியில் வெளியிடப்பட இருந்த விஷாலின் சக்ரா திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என அறிவிப்பு!
விஷால் நடித்து வந்த சக்ரா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் தியேட்டர்களில் படத்தை வெளியிடுவோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் எம் எஸ் ஆனந்தன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஷால் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் தான் சக்ரா. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து இருந்தாலும், கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் தான் இருந்தது. இந்நிலையில் தற்பொழுது தான் திரையரங்குகளை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், விஷால் தனது சக்ரா திரைப்படத்தைஓடிடியில் வெளியிடலாம் என எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆனால் தற்பொழுது தியேட்டர்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால், திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற முயற்சியை இப்படத்தின் தயாரிப்பாளரான விஷால் கைவிட்டுள்ளார். மேலும் இந்த படம் வருகிற பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.