234 தொகுதிகளிலும் போட்டியிட தயார்., அதிமுகவுக்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை.!
கூட்டணி பேச்சுவார்த்தையை காலதாமதம் செய்யாமல் உடனே தொடங்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கூட்டணி பேச்சுவார்த்தையை காலதாமதம் செய்யாமல் உடனே தொடங்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்தான் பேச்சுவார்த்தை என கூறுவது காலதாமதத்திற்கு வழி வகுத்துவிடும். தேமுதிக பொறுத்தளவில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளது.
சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல முடிவை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம். நான் ஒரு பெண் என்பதால் சசிகலாவை ஆதரிக்கிறேன். சசியாகலாவால் பலன் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் என கூறுவது வருத்தம் அளிக்கிறது.
சசிகலாவால் தான் அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள். ஆகையால், கூட்டணிக்கு தலைமை வகிப்பவர்கள் காலதாமதமின்றி உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். யாருக்கு எவ்வளவு தொகுதி என்று கூட்டணிக்கான தலைமை பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.