மகாராஷ்டிராவில் மேலும் 732 பறவை உயிரிழப்பு..மொத்த எண்ணிக்கை 14,524 ஐ எட்டியது.!

Default Image

மகாராஷ்டிராவில் 624 கோழிகள் உட்பட மேலும் 732 பறவைகள் உயிரிழந்துள்ளன.

மகாராஷ்டிராவில் பறவைகள் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளியன்று, மாநிலத்தில் 624 கோழி பறவைகள் உட்பட 732 பறவை இறந்துள்ளது. கடந்த ஜனவரி 8 ஆம் தேதி முதல் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 14,524 ஐ எட்டியுள்ளது.

இதற்கிடையில், 11 மாவட்டங்களில் கோழி பறவைகள் இறப்பதற்கு காரணம் பறவைக் காய்ச்சல் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.  மும்பை, தானே, பால்கர், ரத்னகிரி, புனே, சதாரா, பீட், நாந்தேட், அகோலா மற்றும் வர்தா ஆகிய இடங்களில் இறந்த ஹெரோன்கள், சிட்டுக்குருவிகள் மற்றும் கிளிகள் உள்ளிட்ட 69 பறவைகளையும் மாநில கால்நடை வளர்ப்புத் துறை கண்டறிந்துள்ளது.

இதற்கிடையில், பறவை காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க மாநில அரசு 1.3 கோடி ரூபாய் ஒப்புதல் அளித்துள்ளது என்று மாநில கால்நடை வளர்ப்பு அமைச்சர் சுனில் கேதார் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்