குழியிலிருந்து மீட்கப்பட்ட புதிதாகப் பிறந்த பெண் குழந்தை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள ஒரு குழியிலிருந்து புதிதாகப் பிறந்த பெண் குழ்நதை மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இதனையடுத்து, “குழந்தை உயரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதாகத் தெரிகிறது. அவரது மருத்துவ அறிக்கைகள் இன்னும் வரவில்லை. அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்” என்று ராம்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஐசியூவி பிரிவின் டாக்டர் ராஜீவ் அகர்வால் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தலையில் ஒரு வீக்கம், சில எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் எக்ஸ்-ரே அறிக்கைக்குப் பிறகுதான் இதைச் சொல்ல முடியும். நாங்கள் அந்த குழந்தைக்கு இங்கு கிடைக்கும் சிறந்த சிகிச்சையை வழங்க முயற்சிக்கிறோம் என்று தெரிவித்தார.