தமிழகத்தில் காங்கிரஸ் ஓரிடத்திலாவது தனித்து நின்று போட்டியிட் முடியுமா?- எல்.முருகன் கேள்வி!
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்திலாவது தனித்து நின்று போட்டியிட் முடியுமா? என பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் கேள்வியெழுப்பினார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேதாஜியின் உருவப்படத்துக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், பாஜக சார்பில் வாக்குச்சாவடி குழுக்களை வலுப்படுத்தும் பணி, தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறினார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்திலாவது தனித்து நின்று போட்டியிட் முடியுமா? என கேள்வியெழுப்பினார்.