அண்ணன் பேரறிவாளன் நிச்சயமாக விடுதலையாகி வருவார் – இயக்குனர் நவீன்

அண்ணன் பேரறிவாளன் நிச்சயம் விடுதலையாக வருவார். நீதி வெல்லும் என இயக்குனர் நவீன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேரையும் செய்யுமாறு பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் நவீன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அண்ணன் பேரறிவாளன் நிச்சயம் விடுதலையாக வருவார். நீதி வெல்லும். எந்த சூழலிலும் அவர் முகத்திலிருந்து அகலாத அந்த புன்னகையை நேரில் காண காத்திருக்கும் பலகோடி தமிழர்களில் நானும் ஒருவன். தன்னம்பிக்கை விடாமுயற்சி மனிதநேயம் ஆகியவற்றின் மொத்த உருவம் அவர்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025