ஜன.25-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – மதிமுக தலைவர் வைகோ அறிவிப்பு
இலங்கை அரசை ஊக்குவித்து வரும் மத்திய அரசையும் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் என பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
கடந்த 18-ஆம் தேதி புதுக்கோட்டை கோட்டையப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற போது, காணாமல் போன 4 மீனவர்களும் சடலமாக மீட்கப்பட்டது. செந்தில்குமார், சாம்சன், மெசியா மற்றும் நாகராஜ் ஆகிய நான்கு பேரின் உடலையும் இலங்கை கடற்படை மீட்டது.
இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மீனவர்களின் படகு கவிழ்ந்ததாக சக மீனவர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். மூழ்கிய மீனவர்களை மீட்காமல் இலங்கை கடற்படை சென்றதாகவும் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டினர். இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 4 மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இலங்கை அரசையும், மத்திய அரசையும் கண்டித்து ஜனவரி 25-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 4 மீனவர்களின் உடல்களை தமிழகத்திற்கு கொண்டுவந்து பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசை பற்றி அச்சமோ, கவலையோ துளியளவும் இலங்கை அரசுக்கு கிடையாது. இலங்கை அரசை ஊக்குவித்து வரும் மத்திய அரசையும் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.