3 பொருட்கள் வைத்து சுவையான டீ கடை போண்டா செய்வது எப்படி?
வீட்டிலேயே தெருவோர டீ கடைகளில் கிடைக்கும் சுவையான இனிப்பு போண்டா 3 பொருட்களை வைத்து சுலபமாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- மைதா மாவு – 1 கப்
- தோசை மாவு – 1/2 கப்
- சீனி – 3/4 கப்
- ஏலக்காய் தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பொடியாக்கிய சர்க்கரை மற்றும் தோசை மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். இதனுடன் லேசாக உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். கொஞ்சம் கையில் எடுத்து போடும் பதம் வரும் வரை தண்ணீர் சேர்த்து கலக்கி 5 நிமிடம் மட்டும் ஊற விடவும்.
அதன் பின் லேசாக ஏலக்காய் போடி தூவி மீண்டும் நன்றாக கலந்து வைத்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதித்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும். மாவை கைகளால் எடுத்து போடும் பொழுது கைகளில் சிறிதளவு தண்ணீர் தொட்டு கொள்ளவும். பொன்னிறமாக வரும்வரை அங்குமிங்குமாக உருட்டிவிட்டு நன்கு பொரித்து எடுக்கவும். அட்டகாசமான டீ கடை இனிப்பு போண்டா வீட்டிலேயே தயார்.