பிக்பாஸ்-4 டைட்டில் வின்னர் ஆரிக்கு வில்லனாகும் சரத்குமார்!
புதுமுக இயக்குனரான அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிகர் ஆரிக்கு வில்லனாக, இளம் மலையாள நடிகரான சரத்குமார் நடிக்கவுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நடிகர் ஆரி அறிவிக்கப்பட்டார். இவரது வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இவர் புதுமுக இயக்குனரான அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில், நடிகர் ஆரி முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில், நடிகர் ஆரிக்கு வில்லனாக, இளம் மலையாள நடிகரான சரத்குமார் நடிக்கவுள்ளார். இவர் அங்கமாலி டைரிஸ் என்ற படத்தில் அப்பாணி ரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனால், இவர் ரசிகர்களால் அப்பாணி சரத் என்று அழைக்கப்படுகிறார். இவர் தமிழில் செக்க சிவந்த வானம், சண்டைக்கோழி-2 போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.