பிரதமர் நரேந்திர மோடி உறுதி…!பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா தமிழகத்தில் அமைக்கப்படும்…!

Default Image

பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில், ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைத்த நிலையில் , தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

 

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தைக்கு சென்றார். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலை வணக்கம் என்று கூறி உரையைத் தொடங்கினார். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக கடல்கடந்த வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய தமிழகம் சோழர்களால் பெருமை பெற்ற மண் என்றார். வேத காலத்திலிருந்தே அகிம்சையையும், உலக சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் நாடு இந்தியா எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைதிக்கு அளிக்கப்படும் அதே அளவு முக்கியத்துவம், நாட்டு மக்களை காப்பதற்கும் அளிக்கப்படுகிறது எனவும் பிரதமர் கூறினார். தமிழ்நாட்டிலும், உத்தரப்பிரதேசத்திலும் பாதுகாப்புத்துறை தொழில் பூங்கா அமைக்க உறுதிபூண்டுள்ளதாகக் கூறிய மோடி, இவை பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்புத்துறை உற்பத்திக்கும் எஞ்சின்போல அமையும் என்றார். அனைவரும் கனவு காண வேண்டும் என அப்துல் கலாம் கூறியதை சுட்டிக்காட்டிய பிரதமர், கனவு, சிந்தனையாகவும், சிந்தனை செயலாகவும் மாற வேண்டும் என்றார்.

இதற்கு முன்னர் இருந்த மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட கொள்கை முடக்கத்தால் ராணுவ ஆயத்த நிலை பாதிப்புக்கு உள்ளானதாகவும், பாஜக அரசு அதை மாற்றியிருப்பதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார். தமது உரையை முடிப்பதற்கு முன்னர் தொட்டனைத்தூறும் மணற்கேணி என்ற திருக்குறளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்