பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் நெத்தியடி …! அது உங்கள் கடமை.. இது என் உரிமை!!

Default Image

தமிழ்நாட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று சென்னையில் ராணுவத் தளவாட கண்காட்சியைத் துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அவருக்கு எதிராக பலரும் கறுப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கறுப்புச் சட்டை அணிந்து, காணொலி வாயிலாக பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.நான் உங்கள் குடிகமன். இது என் மாண்புமிகு பிரதமருக்கு, நான் அனுப்பித் தரும் ஒரு திறந்த வீடியோ.தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாதது அல்ல. தமிழக மக்கள் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நீதி வழங்கப்பட்டாகிவிட்டது. ஆனால், செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை. பாமரர்களும், பண்டிதர்களும், இந்த காலதாமதம் கர்நாடகத் தேர்தலுக்காகத்தான் என்று நம்பத் துவங்கி விட்டார்கள். அது ஆபத்தானது, அவமானகரமானதும் கூட .இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். தமிழர்களுக்கும், கர்நாடகத்து மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும், அது உங்கள் கடமை. நினைவுறுத்த வேண்டியது என் உரிமை.இங்கே, இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை, கடித வடிவிலும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

தயவு செய்து செயல்படுத்துங்கள், இந்நிலை மாற வழி செய்யுங்கள், வாழ்க இந்தியா.நீங்களும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்