ஏழு பேரை உடனே விடுவிக்க வேண்டும் – திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்த்தில் தீர்மானம்
இந்தியாவில் வேறெங்கும் காண முடியாத அளவுக்கு அதிமுக ஆட்சியில் ஊழல் செய்துள்ளதாக திமுக கண்டனம் தீர்மானம்.
சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுவிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
புதிய 3 வேளாண் சட்டங்களையும், மத்திய பாஜக அரசு நிபந்தனையின்றி உடனே திரும்பப்பெற வேண்டும். மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வலியுறுத்தி தீர்மானம். இந்தியாவில் வேறெங்கும் காண முடியாத அளவுக்கு அதிமுக ஆட்சியில் ஊழல் செய்துள்ளதாக திமுக கண்டனம் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை மேலும் தாமதமின்றி கைது செய்ய வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தி உள்ளது. மேலும், திமுக தலைவர் முக ஸ்டாலினை முதல்வராக்கிட மாவட்ட செயலாளர் கூட்டம் உறுதியேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.