தடுப்பூசி என்பது கொரோனாவுக்கான கல்லறை பெட்டியில் இறுதியாக அடிக்கப்படும் ஆணி – மத்திய அமைச்சர்
தடுப்பூசி என்பது கொரோனாவுக்கு கல்லறை பெட்டியில் இறுதியாக அடிக்கப்படும் ஆணி மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் ஆனது இந்த உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸை அழிப்பதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது. தற்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பல நாடுகளில் இந்த மருந்துகள் மக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான அச்சம் மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. தடுப்பூசி போட்ட பின் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், தடுப்பூசிக்கு உயிரிழப்புக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறப்படுகிறது
இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் கூறுகையில் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பு நிறைந்தது. பக்க விளைவுகள் ஏற்படுகிறது எனக் கூறப்படுவது பொதுவானது. எந்த ஒரு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட பின்பும், இதனை நீங்கள் காணலாம். தடுப்பூசி என்பது கொரோனாவுக்கு கல்லறை பெட்டியில் இறுதியாக அடிக்கப்படும் ஆணி என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அரசியல் காரணங்களுக்காக தடுப்பூசி பற்றி தவறான தகவல்களை பலர் பரப்புகின்றனர். இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மத்தியில் அச்சமும் தயக்கமும் ஏற்படுகிறது. இது போன்ற தயக்கம் உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அரசு விரும்பவில்லை என்றும், நம்முடைய மருத்துவர்களை போன்ற ஒவ்வொருவரும் சம பாதுகாப்பு பெற வேண்டுமென்று என்றே தடுப்பூசி ஒவ்வொருவருக்கும் போடப்படுகிறது என்றும், ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.