பிரேசில் நாட்டு சிறையில் நடந்த மோதலில் 20 பேர் பலி…!

Default Image

சில கைதிகளை பிரேசில் நாட்டு சிறையில் இருந்து  தப்பிக்க வைக்க ஒரு குழுவினர் முயன்றபோது நடந்த மோதலில் 20 பேர் பலியாயினர்.

பாரா மாகாண தலைநகரான பெலம் நகரில் சான்டா இசபெல் சிறை உள்ளது.நேற்று முன்தினம் மதியம் ஆயுதம் ஏந்திய ஒரு குழுவினர் அங்கு சென்றுள்ளனர். சில கைதிகள் தப்பிக்க உதவுமாறு பாதுகாவலர்களிடம் கோரி உள்ளனர். இதையடுத்து அந்தக் குழுவினர் மீது பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் கைதிகள் மற்றும் அவர்களை மீட்க வந்தவர்கள் என 19 பேர் உயிரிழந்தனர். பாதுகாவலர் ஒருவர் பலியானார். 4 பாதுகாவலர்கள் படுகாயமடைந்தனர். இந்தத் தகவலை அந்த நாட்டு மாகாண பொதுமக்கள் பாதுகாப்பு செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்