மூன்று மாநிலங்களில் Statehood Day – பிரதமர் மோடி வாழ்த்து.!

Default Image

மணிப்பூர், திரிபுரா மேகாலயா ஆகிய 3 மாநிலங்கள் உதய நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநில மக்களைப் பாராட்டியுள்ளார். மேலும் நாட்டுக்கு செய்த பங்களிப்புகளை சுட்டிக்காட்டியுள்ளார். 1972 ஆம் ஆண்டில் இந்த நாளில், மூன்று மாநிலங்களும் 1971 ஆம் ஆண்டின் வடகிழக்கு பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டத்தின் கீழ் முழு அளவிலான மாநிலங்களாக உருவெடுத்தது.

இதுகுறித்து பிரதமர் மோடி, மேகாலயாவின் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். மேகாலயாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிறந்த படைப்பாற்றல் மிக்கவர்களாக உள்ளனர். வரும் காலங்களில் அரசு முன்னேற்றத்தின் புதிய உயரங்களை தொடட்டும் எனவும் ட்வீட் செய்துள்ளார்.

திரிபுரா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, திரிபுரா மாநிலம்பல்வேறு துறைகளில் மாநிலம் மிகச்சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மக்களின் கலாச்சாரம் மற்றும் அன்பான தன்மை இந்தியா முழுவதும் போற்றப்படுகிறது எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுபோல், மணிப்பூர் மக்களுக்கு மாநில தின வாழ்த்துக்கள். நாட்டின் வளர்ச்சிக்கான மணிப்பூர் மாநிலத்தின் பங்கு பெருமைக்குரியது. மணிப்பூரின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. புதுமை மற்றும் விளையாட்டு திறமைகளின் சக்தியாக மணிப்பூர் உள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்