பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் 7 வயது இளம்பெண் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில் காவல்நிலையத்தில் சரண்…!

Default Image

உத்தரப்பிரதேச உன்னாவ் தொகுதி பாஜக எம்.எல்,ஏ. குல்தீப் சிங் செங்கார், 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில்  லக்னோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நள்ளிரவில் திடீரென தமது ஆதரவாளர்கள் புடை சூழ வந்தார்.

அப்போது தம்மை சூழ்ந்துக் கொண்ட செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம்மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றார். தாம் தலைமறைவாகிவிடவில்லை என்பதை காட்டவே அங்கு வந்ததாகவும், நீதிமன்றத்தில் இன்று சரண் அடைய இருப்பதாக கூறி திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது செய்தியாளர்கள் மீது திடீரென செங்காரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தினர்.

17 வயது சிறுமியை, குல்தீப் சிங் செங்காரும் அவரது சகோதரர்களும் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. செங்கார் மற்றும் அவரது சகோதரர்களை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமி, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். அப்போது கைது செய்யப்பட்ட அவரது தந்தை, காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்ததையடுத்து இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

US Election 2024 live
PM Modi - Trump
Royal Enfield Interceptor Bear 650
sathya (2) (1)
Donald Trump
Tamilnadu CM MK Stalin
US Election 2024 trump win