நடிகர் சோனு சூட் பெயரில் ஐதராபாத்தில் ஆம்புலன்ஸ் சேவை!
சோனு சூட்டின் சேவையால் ஈர்க்கப்பட்டதால், ஹைதராபாத்தை சேர்ந்த நீச்சல் வீரர் சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்பொழுதும் மக்கள் வாழ்வாதாரம் இழந்து இயல்பு வாழ்க்கை இன்னும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே தனியார் நிறுவனங்களும் அரசாங்கமும் இந்த மக்களுக்கு உதவி வந்தது. ஆனால், நடிகர் சோனு சூட் தற்பொழுது வரையிலும் தனது சொத்துக்கள் மற்றும் தன்னிடம் உள்ள அனைத்து பொருட்களையும் வைத்து ஏழை மக்களுக்கு உதவி வருகிறார். இவரது இந்த சேவையால் ஈர்க்கப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த நீச்சல் வீரரான சிவா என்பவர் சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
பிரபலமான சாகர் ஏரியில் விழுந்து தத்தளித்த நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றி மூழ்கி இறந்து போனவர்களின் சடலங்களை மீட்டு தரும் சேவையை செய்யக் கூடிய நீச்சல் வீரர் சிவா மக்கள் அளித்த நன்கொடை மூலம் இந்த ஆம்புலன்ஸ் சேவை தற்போது துவங்கியுள்ளார். சோனு சூட்டின் சேவை தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்ததாகவும், அதனால் தான் அவரது பெயரை சூட்டிதா கவும் சிவா தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்த சோனு சூட், தனக்கு இது பெருமையாக இருப்பதாகவும் சிவா பற்றியும் அவரது சேவை பற்றியும் தான் கேள்விப்பட்டு மகிழ்ந்ததாகவும், அவரைப் போன்ற பல சிவக்கள் நமக்குத் தேவை ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவி செய்ய முன்வரவேண்டும் எனவும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.