இந்த ஆமைக்கு ஆயுசு கெட்டி தான் போல! 189-வது பிறந்தநாள் கொண்டாடிய ஆமை!
செயின்ட் ஹெலினா தீவில் வாழ்ந்து வரும் ஜோனதன் என்ற ஆமை, நேற்று தனது 189-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது.
இன்று மனிதர்கள் நூறு ஆண்டுக்கு மேல் வாழ்ந்தாலே அபூர்வமாக பார்க்கும் உலகில் மனிதர்களைக் காட்டிலும் ஐந்தறிவு கொண்ட ஆமை இனம் ஒன்று 100 ஆண்டுகளை கடந்து தனது 189 ஆவது பிறந்தநாளை கொண்டாடி உள்ளது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
செயின்ட் ஹெலினா தீவில் வாழ்ந்து வரும் ஜோனதன் என்ற ஆமை, நேற்று தனது 189-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இந்த ஆமை- 1832 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. செயின்ட் ஹெலினாவின் முன்னாள் ஆளுநர் பெயரான ஜோனதன் என்ற பெயரை இந்த ஆமைக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.