ஆஸ்திரேலியாவில் ஜொலிக்கும் தமிழக நட்சத்திரங்களான நடராஜன் மற்றும் சுந்தர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தி கப்பா, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.நேற்று தொடங்கிய இந்த நான்காவது போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 369/10 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது.இதில் ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களை வீழ்த்தியதில் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் மற்றும் நடராஜன் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற நாள் முதல் தொடர்ச்சியாக பல வீரர்கள் காயமடைந்தனர்.இந்நிலையில் தனக்கு கிடைத்த முத்தான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நடராஜன் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஜொலித்தது போல் இந்த டெஸ்ட் போட்டியிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர்:
அவருடன் வாஷிங்டன் சுந்தரும் கைகோர்த்துள்ளார் ,இருவருக்குமே இதுதான் அறிமுக டெஸ்ட் போட்டி.இந்த முத்தான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட நடராஜன் மற்றும் சுந்தர் இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன் மற்றும் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இருவருக்குமே இந்தியாவுக்கான அறிமுக டெஸ்ட் போட்டி இதுதான், நடராஜன் மற்றும் சுந்தர் இந்தியாவின் 300 வது மற்றும் 301 வது டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்திய அணி 62 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது களத்தில் சேதேஸ்வர் புஜாரா (8), கேப்டன் அஜிங்க்யா ரஹானே (2) ஆகியோர் உள்ளனர்.