தேங்காய் தண்ணீரில் இத்தனை மருத்துவ குணங்களா, அறியலாம் வாருங்கள்!

Default Image

நாள்தோறும் நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய தேங்காயை உடைக்கும்போது அதில் வரக்கூடிய தண்ணீரை குடிப்பார்கள் சிலர் கொட்டுபவர்கள் பலர். ஆனால் அந்த தேங்காய் தண்ணீரில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது தெரியுமா? அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேங்காய் தண்ணீரில் உள்ள மருத்துவ குணங்கள்

தேங்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது தைராய்டு சுரப்பி குறைவாக உள்ளவர்களுக்கு உடலில் ஆற்றல் அதிகரிப்பதுடன் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவுகிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு இந்த தேங்காய் தண்ணீர் அதிகம் பயன்படுகிறது. சிறுநீரக பிரச்சனை, காய்ச்சல், சளி என அனைத்தையும் உருவாக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை தேங்காய் தண்ணீரில் உள்ளது. உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற இது பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாக சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கற்கள் உருவாகாமல் பாதுகாக்கிறது.

மேலும் செரிமான பிரச்சனைகளை நீக்குவதற்கும் வாய்வு தொல்லையில் இருந்து விடுபடுவதற்கும் இது உதவுகிறது. தினமும் இந்த தேங்காய் தண்ணீரை குடித்து வருவதன் மூலம் பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும், உடல் எடையை குறைக்கவும்  செய்கிறது. மேலும் உடல் வறட்சி நீங்குவதுடன் பளபளப்பான சருமத்தையும் தருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய தேவையற்ற நோய்களை தடுக்க இது பெரிதும் உதவுகிறது. மேலும் அதிக அளவில் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு ஆல்கஹால் காரணமாக ஏற்படக்கூடிய தலைவலிக்கு இந்த தண்ணீர் பயன்படுகிறது. இவ்வளவு மருத்துவ நன்மைகள் உள்ள தேங்காய் தண்ணீரை கொட்டாமல் கிடைக்கும் பொழுது குடித்து நன்மைகளை பெறுவோம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்