நாக்கில் எச்சி ஊறும் நண்டு தொக்கு சுவையாக செய்வது எப்படி?
நண்டு என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க முடியாது, அட்டகாசமான சுவை நாக்கில் அப்படியே வைத்திருக்க கூடிய குணம் கொண்ட நண்டை வைத்து எவ்வாறு தொக்கு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நண்டு
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- இஞ்சி பூண்டு விழுது
- உப்பு
- எண்ணெய்
- மஞ்சள் தூள்
- மல்லி தூள்
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- கருவேப்பிலை
செய்முறை
முதலில் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் இஞ்சி பூண்டு விழுதையும் அதனுடன் பச்சை மிளகாயையும் இரண்டாக உடைத்து போட்டு நன்றாக வதக்கவும். இவை இரண்டின் பச்சை மணம் போனதும் வெட்டி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து அதற்காக சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் ஆகியவை சிறிதளவு சேர்த்துக் கொண்டு நன்றாக கிளறி விடவும்.
பின், ஏற்கனவே சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுகளை துண்டு துண்டாக உடைத்து இந்த மசாலா கலவையில் போட்டு நன்கு கிளற வேண்டும். இரண்டு நிமிடம் மட்டும் மசாலாவில் அப்படியே வேக வைத்து விட்டு, ஒரு டம்ளர் மட்டும் தண்ணீர் விட்டு மூடி வைத்து ஒரு பத்து நிமிடம் வேக வைக்கவும். நன்கு வெந்ததும் நண்டில் உள்ள நீர் வெளியேறும் அந்த நீரே சுவையை கொடுக்கும். எனவே அதிக அளவில் நீர் பயன்படுத்த தேவையில்லை நன்கு கிளறி விட்டு லேசாக கருவேப்பிலை தூவி அடுப்பை அணைத்து விட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான நண்டு தொக்கு தயார்.