தொடரும் உயிரிழப்புகளால் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட அப்ளிகேஷன்கள்!

Default Image

பயனர்களின் பாதுகாப்பு கொள்கையை மீறிய தனிநபர் கடன் கொடுக்கும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்துள்ளது போல, அதே அளவு எளிதாக மக்களின் உயிர்களும் பறிக்கப்படுகிறது. அந்த வகையில், அண்மைக்  நாட்களாக  இந்தியாவில் டிஜிட்டல் முறையில் ஒருவரின் KYC-ஐ மட்டும் அடிப்படையாகக் கொண்டு, ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம் விரைவாக கடன் கொடுக்கும் பழக்க வழக்கம் அதிகரித்துள்ளது.

இந்த அப்ளிகேஷன் மூலம் கடன் வாங்கியவர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவர்கள் மீது செலுத்துகின்ற அழுத்தம் காரணமாக பலவகையான இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இது குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், பயனர்களின் பாதுகாப்பு கொள்கையை மீறிய தனிநபர் கடன் கொடுக்கும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்காக பயனர்கள் மற்றும் அரசு ஏஜென்சிகள் தேவையில்லாத அப்ளிகேஷன்கள் என  flag  செய்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை கூகுள் பரிசீலனை செய்துள்ளது. மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஹைதராபாத்தில் கடன் வாங்கிய ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, கூகுள் இந்த நடவடிக்கையை  மேற்கொண்டுள்ளது. மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்