ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது! ராகுல் காந்தி பேச்சு!

தமிழக மக்களுக்கு வணக்கம். ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்  கலாச்சாரம்,பாரம்பரியம் இந்தியாவிற்கு இன்றியமையாதது. 

தமிழகம் முழுவதும் தை பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில், ராகுல் காந்தி அவர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை புரிந்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘தமிழக மக்களுக்கு வணக்கம். ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்  கலாச்சாரம்,பாரம்பரியம் இந்தியாவிற்கு இன்றியமையாதது. அது மதிக்கப்பட வேண்டும். தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை, பாரம்பரியத்தை  காக்க வேண்டியது என் கடமை. உங்களது உணர்ச்சிகளையும், கலாச்சாரத்தையும் ரசித்து பாராட்டவே வந்துள்ளேன்.’ என  கூறியுளளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.