தனுஷ் – செல்வராகவன் கூட்டணியின் அடுத்த பட தலைப்பு இதுதான்!
தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் அடுத்த புதிய படத்திற்கான தலைப்பு நானே வருவேன் என்பது தான் என அதிகாரப்பூர்வமாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்த கூட்டணியில் தற்பொழுது இரு படங்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆயிரத்தில் ஒருவன் 2 எனும் படமும் மற்றொரு பெயரிடப்படாத படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படம் 2024 இல் தான் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெயரிடப்படாத இந்த புதிய படம் 2021 இல் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் அண்மையில் துவங்கியது.
பொங்கலன்று இதற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய படத்தின் டைட்டில் லுக் இன்று இரவு 7.10 .மணிக்கு அறிவிக்கப்படும் என செல்வராகவன் அவர்கள் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். தற்பொழுது இந்த படத்திற்கான அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த புதிய தனுஷின் திரைப்படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு,
இதோ!
உங்கள் பார்வைக்கு !#S12TitleLook @dhanushkraja @theVcreations @thisisysr @Arvindkrsna @RVijaimurugan@kabilanchelliah @kunaldaswani pic.twitter.com/4LUBowWE2l— selvaraghavan (@selvaraghavan) January 13, 2021