கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு மாஸ்டர் பட இயக்குனர் வேண்டுகோள்!
திரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
இப்படம், தமிழகம் முழுவதும் 800 தியேட்டர்களில் வெளியாகி உள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சாந்தனு, அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை மாளவிகா மோகன் ஆகியோர் மாஸ்க் அணிந்து, ரோகிணி தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் இணைந்து படத்தை கண்டுகளித்துள்ளனர்.
அதன்பின் பேசிய அவர், மாஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்களின் வருகை அளிக்கிறது. திரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.