தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி: ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் விருந்து!

Default Image

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் S12 படத்தின் டைட்டில் லூக் போஸ்டரை நாளை இரவு 7.10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் வரும் 2024 ஆம் ஆண்டில் ஆயிரத்தில் ஒருவன்-2 வெளியிடவுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை தூண்டிய நிலையில், தற்பொழுது செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் மற்றொரு பெயரிடாத படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கியது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ஜீப் வாகனம் முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பொங்கலில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் S12 படத்தின் டைட்டில் லூக் போஸ்டரை நாளை இரவு 7.10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று செல்வராகவன் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்