இத்துனோண்டு கிராம்பில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!
பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் தனக்குள் பல்வேறு நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் அடக்கி வைத்துள்ள கிராம்பு குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கிராம்பின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்
கிராம்பில் அதிக அளவில் ஜீரண என்சைம்களை அதிகரிக்கக்கடிய தன்மை இருப்பதால் செரிமான மண்டலத்தை பாதுகாக்க உதவுவதுடன் வாயு, நெஞ்செரிச்சல், குமட்டல் ஆகிய பிரச்சனைகளை நீக்குகிறது. இந்த கிராம்பில் உள்ள பினைல்புரொபனைடு காரணமாக செல்களின் மரபணு நோய்களை தடுத்து கேன்சர் செல் உருவாகாமல் பாதுகாக்கிறது. மேலும் நுரையீரல் புற்று நோய் இருப்பவர்கள் ஆரம்ப காலகட்டத்திலேயே கிராம்பு பயன்படுத்தும்பொழுது முற்றிலுமாக இதனை சரிசெய்யலாம் என கூறப்படுகிறது. மேலும் தண்ணீரால் பரவக்கூடிய காலரா நோயை உருவாகாமலும், காலரா பாக்டீரியாவுக்கு எதிராகவும் செயல்பட்டு கிராம்பு உடலை பாதுகாக்கிறது.
இது எறும்பு மற்றும் பூச்சிகளை விரட்டியடிக்கும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது. மேலும் கிராம்பில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் காரணமாக கல்லீரலில் காணப்படக்கூடிய நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. இரத்த வெள்ளை அணுக்கள் குறைவதை தடுத்து, அதிகரிக்க உதவுகிறது. பல் வலி, பல் சொத்தை போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுவதுடன் தலை வலி ஏற்படாமல் பாதுகாக்கிறது. பாலுடன் சிறிதளவு ராக் சால்ட் சேர்த்து கிராம்பு பொடி சேர்த்துக் குடித்தால் தலைவலி உடனடியாக தீரும்.