என் தம்பி விஜய் அப்படி நினைத்திருக்கமாட்டார்., இருவரும் என்னைபோலதான் – சீமான் பேட்டி

இரண்டு பேருமே என் தம்பிகள் தான், இரண்டு பேர் படமும் வரவேண்டும் என்று தான், நான் மனதார விரும்புகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மாஸ்டர் பட வெளியீடு காரணமாக சிம்பு படத்தை வெளியிடுவதில் சதி செய்கிறார்கள் என்று டி.ராஜேந்தர் பேசியது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சீமான், இரண்டு பேருமே என் தம்பிகள் தான், இரண்டு பேர் படமும் வரவேண்டும் என்று தான், நான் மனதார விரும்புகிறேன். திரைப்படைத்தை வாங்கி விநியோகம் செய்பவர்கள் செய்வார்களே தவிர, என் தம்பி விஜய் அப்படி நினைத்திருக்கமாட்டார். சிம்பு படம் வெளியாக கூடாது, நம்ம படம் வரும்போது என விஜய் அப்படி நினைக்கமாட்டார் என கூறியுள்ளார்.
என்னைப்போல் அவர்கள் இருவருமே எப்பொழுதும் அன்பகத்தான் இருப்பார்கள். ஏன் அந்த மாதிரி நடக்குது என்று தெரியலை. படத்தை வாங்கி விநியோகம் செய்பவர்கள், ஒரு வேலை விஜய் படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டதால், சிம்பு படம் வந்தால் வசூலை பாதிக்கக்கூடாது என்று நினைக்கலாம். ஆனால், முன்னாடி உள்ள காலகட்டத்தில் பொங்கல், தீபாவளி அன்று 10, 15 படம் திரைக்கு வரும்.
இப்ப ஏன் அது மாதிரி ஒரு முறையை ஒழித்துவிட்டார்கள் என்று தெரியவிலை. ரஜினி படம் வந்தால் ஒரே படம், கமல் அஜித், தம்பி விஜய் ஆகியோர் படம் வந்தால் ஒரே படம் தான் திரைக்கு வருகிறது. ஏதோ ஒரு கொடுமை நிகழ்ந்துவிட்டது. அதை சரி செய்ய வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். சிம்பு, விஜய் ஆகிய இரண்டு பேர் படத்தையும் வெளியிடலாம். அதில் ஒன்றும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025