முகத்திற்கு நீங்கள் ஆவி பிடித்ததுண்டா? அப்படி இதில் என்ன பயன் உள்ளது?
ஆவி பிடிப்பதால் நமது சரும ஆரோக்கியம் அடைவதோடு. சரும பிரச்சனைகள் தொடர்பான பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
பொதுவாக நாம் ஆவி பிடிப்பது எப்போது என்றால், இருமல், ஜலதோஷம் மற்றும் தலை பாரம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்போது ஆவி பிடிப்பது உண்டு. ஆனால் ஆவி பிடிப்பதால் நமது சரும ஆரோக்கியம் அடைவதோடு. சரும பிரச்சனைகள் தொடர்பான பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
எப்போதெல்லாம் ஆவி பிடிக்கின்றோமோ, ஆவி பிடித்த உடன் முகத்தை சுத்தமான துணியை கொண்டு துடைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் எளிதில் வெளியே வருவதோடு, சரும மிகவும் பிரகாசமாக காணப்படும்.
கரும்புள்ளிகள் அல்லது வெள்ளை புள்ளிகள் முகத்தில் காணப்படுமாயின், 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் மூக்கில் காணப்படும் கருப்பு அல்லது வெள்ளை போன்ற புள்ளிகள் எளிதில் வந்துவிடும். மேலும் அவை வேரோடு வருவதால் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
இன்று இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினையே முகப்பருக்கள் தான். முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால் சருமம் எண்ணெய் பசையோடு காணப்படும்.
மேலும் துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள் துணியால் துடைக்கும் போது அது சருமத்தை விட்டு அகன்றுவிடும். முதுமைத் தோற்றத்தை தடுக்க, ஆவி பிடித்தால் அந்த அழுக்குகள் வெளியேறி முகம் பளிச்சென்று மாறுவதுடன், இளமைத் தோற்றத்தையும் தருகிறது.