கடலூர் மாவட்டத்தில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு.!
அடுத்த சில மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 14, 15, 16 -ஆம் தேதிகளில் பரவலாக மழை நீக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில், இலங்கையை ஒட்டியுள்ள குமரி கடலில் வளிமண்டல மேலடுக்கில் தீவிர சுழற்றி ஏற்பட்டுள்ளதால் அடுத்த சில மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, தேனீ, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.