அ.தி.மு.க. தான் பிரதமர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்க முக்கிய காரணம் …!அமைச்சர் கடம்பூர் ராஜூ
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பிரதமர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருப்பதற்கு அ.தி.மு.க.தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், காவிரி பிரச்சனைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கியதால்தான், பிரதமர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருப்பதாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.