விஜய்யின் “மாஸ்டர்” கேரளாவில் எப்போது ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!

கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், கேரளா முழுவதும் வருகின்ற ஜனவரி 13ம் தேதியே மாஸ்டர் படம் திரையிடப்பட உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்திலும் அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியுள்ள விஜய்யின் மாஸ்டர் படம் வருகிற பொங்கலுக்கு உலகமெங்கிலும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக அட்டகாசமாக நடித்து உள்ளார். இந்தியா முழுவதும் பொங்கலுக்கு முன்தினம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ரசிகர்களும் தற்பொழுது டிக்கெட் வாங்க ஆரம்பித்து விட்டதுடன், பலரும் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தளபதி ரசிகர்கள் ஜனவரி 13எப்போது வருமென ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கேரளா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால் அங்குள்ள தளபதி ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். அதன் பின் முதல்வருடனான பேச்சு வார்த்தைக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், கேரளா மாநிலம் முழுவதிலும் வருகிற ஜனவரி 13ம் தேதியே மாஸ்டர் படம் திரையிடப்பட உள்ளது என ஸ்ரீதேவி ஸ்ரீதர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே அங்குள்ள விஜயின் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
All decks cleared for #Master in Kerala, to release on January 13 #MasterPongal #ThalapathyVijay @iam_arjundas
MORE- https://t.co/kKUNJUVSTE pic.twitter.com/866aCgi1L2
— sridevi sreedhar (@sridevisreedhar) January 11, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…
March 10, 2025
நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
March 10, 2025