#BREAKING: கொரோனா எதிரொலி – காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல்.!
கொரோனா காரணமாக பிப்ரவரி 1-ஆம் தேதி காகிதம் இல்லா வடிவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, புத்தகம் வடிவில் இல்லாமல் இந்த முறை மென்பிரதி (Software) மூலம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல் கூறப்படுகிறது. காகிதத்தை தொட வேண்டாம் என சுகாதார நிபுணர்கள் அறிவித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, 2021-22 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் அடுத்த மாதம் 1ஆம் தேதி கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.